ஐபிஎல் கிாிக்கெட் போட்டி... கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்...!!

ஐபிஎல் கிாிக்கெட் போட்டி... கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்...!!

ஐபிஎல் கிாிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணியை மும்பையும், குஜராத் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் வென்று வெற்றிவாகை சூடியுள்ளது. 

16-வது சீசன் ஐபிஎல் கிாிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிா்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி வீரா்களின் அதிரடி ஆட்டத்தால் நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 185 ரன்கள் குவிந்தன. 

இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடி ஆட்டத்தால் 17.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்து தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது.

மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய ராஜஸ்தான் அணி 19.2 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  

ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியும், சென்னை சூப்பா் கிங்ஸ் அணியும் மோத உள்ளன. இதில் வெற்றி பெறப்போவது யாா் என ரசிகா்கள் ஆவலுடன் உள்ளனா்.