தனது பங்களாவை 67 கோடி ரூபாய்க்கு விற்ற பிரபல கிர்க்கெட் வீரர்!!!

தனது பங்களாவை 67 கோடி ரூபாய்க்கு விற்ற பிரபல கிர்க்கெட் வீரர்!!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டரான ஸ்டீவ் ஸ்மித், சிட்னியில் உள்ள தனது சொகுசு பங்களாவை, 12.38 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் மதிப்பில் விற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த சொத்தை அவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வாங்கும்போது இருந்த மதிப்பை விட இரண்டு மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர் ஸ்டீவ் ஸ்மித், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர். பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள், தான் கடினமாக விளையாடி சம்பாதித்த பணத்தை பல தொழில்களில் அல்லது பல விஷயங்களில் முதலீடு செய்கின்றனர். அதே போன்று ஸ்டீவ் ஸ்மித்தும் சிட்னியில் மிக விலையுயர்ந்த பங்களாவை வாங்கி அதில் முதலீடு செய்தார்.

 சிட்னியின் கிங்ஸ் சாலையில் உள்ள அந்த மாளிகை ஜூலை 7 ம் தேதி அன்று ஏலத்திற்கு விடபட்டது. 11.5 மில்லியன் டாலர் மதிப்புக்கு ஏலம் தொடங்கப்பட்டது. மேலும் அது 12 மில்லியன் டாலருக்கு அதிகரித்ததாக கூறப்பட்டுள்ளது. அதனை தற்போது, அவர் இறுதியாக, 12.38 மில்லியன் ஆஸ்திரேலிய டாலருக்கு விற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ரூபாயில் அதன் மதிப்பு 67 கோடி ஆகும். ஸ்மித்தும் அவரது மனைவி டேனி வில்லீஸும் சேர்ந்து கடந்த 2020 ம் ஆண்டு, அந்த பங்களாவை வாங்கும் போது அதன் அசல் மதிப்பு 6.6 மில்லியன் டாலர் ஆகும். இந்த சொத்தை அவர் வாங்கும்போது இருந்த மதிப்பை விட இரண்டு மடங்கு அதிக விலைக்கு விற்றுள்ளார்.

மொத்தம் 766 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பங்களாவில் திரையரங்கம், நீச்சல் குளம், நெருப்பிடம் போன்ற பல சொகுசு வசதிகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.