இது வீடா? இல்லை வனவிலங்கு பூங்காவா? - நடு வீட்டில் குதிரையை கொஞ்சும் தோனி

இது வீடா? இல்லை வனவிலங்கு பூங்காவா? - நடு வீட்டில் குதிரையை கொஞ்சும் தோனி - வீடியோ வைரல்

இது வீடா? இல்லை வனவிலங்கு பூங்காவா? - நடு வீட்டில் குதிரையை கொஞ்சும் தோனி

இது வீடா? இல்லை வனவிலங்கு பூங்காவா? என கேட்கும் அளவிற்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நம்மில் பலர் நடு வீட்டில் நாயுடன் விளையோடுவோம். அல்லது பூனையுடன் விளையாடி மகிழ்ந்திருப்போம். ஆனால் தோனி சற்று வித்தியாசமாக, நடு வீட்டில் குதிரையை வைத்து விளையாடியுள்ளார்.

இது தொடர்பான வீடியோவில் பஞ்சவர்ண கிளியை அவரது மனைவி சாக்சி கொஞ்சுவது போலவும், ஏராளமான நாய்கள், குதிரைகள் மற்றும் பறவைகள் இளைப்பாறுவது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதற்கு லைக்குகளை குவிக்கும் நெட்டிசன்கள், குதிரையுடன் தோனி விட்டு விடுவாரா? இல்லை சிங்கம், புலி என வளர்க்க ஆரம்பித்து விடுவாரா? என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.