ஐபிஎல் கிரிக்கெட்: அறிமுக அணிகளான குஜராத் - லக்னோ இன்று மோதல்! ஆரவார எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்!!

ஐபிஎல் கிரிக்கெட்: அறிமுக அணிகளான குஜராத் - லக்னோ இன்று மோதல்! ஆரவார எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்!!

ஐபில் டி-20 கிரிக்கெட் போட்டியில் இன்று அறிமுக அணிகளான குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இப்போட்டியில், ஹர்திக் பாண்டியா தலைமையில் குஜராத் அணியும், கே.எல் ராகுல் தலைமையில் லக்னோ அணியும் களம் காண்கிறது.

இரு அணிகளுக்குமே இது அறிமுகப்போட்டி என்பதால், தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணி வீரர்களுமே கடுமையாக போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.