முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேக்கு கொரோனா.!!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் ஷேன் வார்னேக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேக்கு கொரோனா.!!

51 வயதான ஷேன் வார்னே லண்டன் ஸ்பிரிட் ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார்.

அண்மையில் இவருக்கு உடல் நலம் குன்றியதை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஷேன் வார்னேக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதோடு, நேற்று லார்ட்ஸில் நடைபெற்ற தெற்கு பிரேவ் அணிக்கு எதிரான போட்டியையும் காண நேரில் வரவில்லை என சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் ஆர்டிபிசிஆர் முடிவு வெளியாகும் வரை அவர் தனிமைப்படுத்தப்படுவார் எனவும், அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு கொரோனா பாதிப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.