’செஸ் ஒலிம்பியாட்டை’ புகழ்ந்து சச்சின் ட்வீட்...!

’செஸ் ஒலிம்பியாட்டை’ புகழ்ந்து சச்சின் ட்வீட்...!

உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறுவதையொட்டி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சென்னை மாமல்லபுரம்:

இந்தியாவில் முதல்முறையாக, தமிழகத்தின் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மிகப் பிரம்மாண்டமாக செய்துள்ளது. அதேபோன்று சென்னை வந்த செஸ் வீரர்களுக்கும் சிறப்பான மூறிஅயில் வரவேற்புகளை அளித்து அவர்களி வியப்படைய செய்துள்ளது தமிழக அரசு. இன்று நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி சென்னை நகரம் விழா கோலம் பூண்டுள்ளது. 

முதலமைச்சர்கள் வாழ்த்து:

சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 7 மாநில முதலமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அருணாசலப் பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு, சிக்கிம் முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் ஆகியோர், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். கர்நாடகாவின் பசவராஜ் பொம்மை, ஸ்டாலினை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தியுள்ளார்.

அதோடு மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ், ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் ஆகியோர், தங்களது இணையப்பக்கங்களின் மூலம் வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ளனர். இப்படி 7 மாநில முதலமைச்சர்களும் தங்களது வாழ்த்துக்களை போன், கடிதம், இணயம் மூலமாக செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்துமாறு ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சச்சின் வாழ்த்து:

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ”சதுரங்கம் பிறந்த இடத்தில் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பதாகவும், இது இந்தியாவிற்கு மிக முக்கியமான தருணம்” என்றும் சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய குழு மற்றும் அனைத்து போட்டியாளர்களுக்கும் நல்வாழ்த்துகள் என தனது வாழ்த்தினை தெரிவித்திருந்தார்.