சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்த சென்னை அணியின் இளம் நட்சத்திரம் ருத்துராஜ் கெய்க்வாட்!

சென்னை அணியின் இளம் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்த சென்னை அணியின் இளம் நட்சத்திரம் ருத்துராஜ் கெய்க்வாட்!

புனேவில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருத்துராஜ் கெய்க்வாட், அதிரடியாக ஆடி, 57 பந்துகளில் 99 ரன்கள் விளாசினார்.

இதன்மூலம், ஐ.பி.எல். போட்டிகளில் 31 இன்னிங்ஸ்களில் ஆயிரத்து 76 ரன்களை குவித்துள்ள ருத்துராஜ் கெய்க்வாட், ஐ.பி.எல். போட்டிகளில் அதிவேகமாக ஆயிரம் ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

இந்தப் பட்டியலில் சுரேஷ் ரெய்னா இரண்டாமிடத்திலும், ரிஷப் பண்ட், தேவ்தத் படிக்கல் ஆகியோர் 3ஆம் இடத்திலும், எம்.எஸ்.டோனி, ரோகித் சர்மா ஆகியோர் 4ஆம் இடத்திலும் உள்ளனர்.