ஐ.பி.எல்-லில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா சென்னை? - அறிமுக அணியான லக்னோவுடன் இன்று பலப்பரீட்சை

மும்பையில் இன்று  நடைபெறும் ஐபிஎல் போட்டியில்,  நடப்பு சாம்பியன் சென்னை அணி, அறிமுக அணியான லக்னோவை எதிர்கொள்கிறது.

ஐ.பி.எல்-லில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா சென்னை? - அறிமுக அணியான லக்னோவுடன் இன்று பலப்பரீட்சை

மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான சென்னை அணி, தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோல்வியை தழுவியது.

இதனால், அறிமுக அணியான லக்னோவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதேபோல், லக்னோ அணியும் தனது முதல் ஆட்டத்தில் குஜராத்திடம் தோல்வியை தழுவியது.

எனவே, இன்றைய ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி தொடரில் வெற்றிகணக்கை தொடங்குமா?  என எதிர்பார்க்கப்படுகிறது.