வெஸ்ட் இண்டீஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி! புள்ளிகள் பட்டியலில் முதலிடம்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி! புள்ளிகள் பட்டியலில் முதலிடம்!

நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம், புள்ளிகள் பட்டியலிலும் ஆஸ்திரேலிய அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.