ஹார்திக்-கு முத்தம் கொடுத்த அஃப்கான் கிரிக்கெட் ரசிகர்!!! வைரல் வீடியோ!!

இந்தியாவின் வெற்றியைத் தொடர்ந்து, அஃப்கானிய கிரிக்கெட் ரசிகர் ஒருவர், டிவியில் வந்த ஹர்திக்-கு முத்தம் கொடுத்து கொண்டாடினார். அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஹார்திக்-கு முத்தம் கொடுத்த அஃப்கான் கிரிக்கெட் ரசிகர்!!! வைரல் வீடியோ!!

15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது லீக் போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. அதில், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி போட்டியிட்டு தோலிவியடைந்ததை அடுத்து, இந்தியர்கள் மட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் அணியின் உலகளாவிய ரசிகர்களும் பெருமளவில் கொண்டாடி வருகின்றனர். இந்திய அணியின் தீராத போட்டியாளராகக் கருதப்படும் பாகிஸ்தானிய கிரிக்கெட் அணியின் பந்துகளிடம் இருந்து அடிக்கடி நூலளவில் தப்பியது ஹர்திக் பாண்டியா தான். 

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால் 19 புள்ளி 5 ஓவரில் 147 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரிஸ்வான் 43 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில்  புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

You are an inspiration': Hardik Pandya on Dinesh Karthik after wicketkeeper  batsman's heroics help India beat SA in 4th T20I

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, கே.எல்.ராகுல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஒரு வேளை தோற்று விடுவோமோ!!! என்று பயந்த இந்திய அணியைத் தூக்கி சுமந்தது ஜடேஜா - ஹர்திக் ஜோடி தான்.

திக் திக் நிமிடங்கள்:

கடைசி இரண்டு பந்துகளுக்கு முன் வரை, ரசிகர்களுக்கு இதய துடிப்பை அதிகரித்த இந்த போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மேலும், பேட்டிங்கில் ஆட்டமிழக்காமல் 33 ரன்களும், பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளும் எடுத்து ஆல்ரவுண்டராக ஜொலித்த ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

நெகிழ்ச்சி சம்பவங்கள்:

இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், தினேஷ் கார்த்திக் ஹார்திக்கை தலை வணங்கினார். மேலும், விராட் கோலி, ‘நல்ல வேளை கடவுளே தோற்கவில்லை’ என பிரார்த்தனை செய்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்ற வேளையில், மேலும் ஒரு வீடியோ தற்போது இந்திய கிரிக்கெட் வீரர்களால் இணையம் முழுவதும் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | தேசியக்கொடியை வாங்க மறுத்த ஜெய் ஷா..! இணையத்தை தெறிக்கவிடும் காங்கிரஸார்..!

வைரல் வீடியோ:
 
அஃப்கானைச் சேர்ந்த ஒரு கிரிக்கெட் ரசிகர், இந்தியாவின் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, இந்தியா, கடைசி நிமிடம் வரை பதை பதைக்க வைத்து வெற்றிப் பெற்றதைக் கொண்டாடும் வகையில், டிவியில் வந்த ஹர்திக் பாண்டியாவிற்கு முத்தம் கொடுத்து, டிவியைக் கட்டிப் பிடித்துக் கொண்டாடியுள்ளார். அப்போது, பெருமையில் மார்தட்டிக் கொண்டு மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, அதில், “இந்தியா மற்றும் அஃப்கானில் உள்ள அனைத்து சகோதர்களுக்கும் வாழ்த்துக்கள். இங்கு, அஃப்கானிய சகோதரர்கள், இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடுவதைப் பாருங்கள்” என பதிவிட்டிருந்தார்.
 
இந்த விடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருவதோடு, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாகிஸ்தானுக்கும் அஃப்கானிஸ்தானுக்கும் இடையேயான போட்டிப் பற்றியும், பல நெட்டின்சன்கள் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.