ஐபிஎல் ரசிகர்களை அள்ளும் சென்னை மெட்ரோ நிலையங்கள்...பிரமாண்ட திரையில் ஒளிபரப்பா?

ஐபிஎல் ரசிகர்களை அள்ளும் சென்னை மெட்ரோ நிலையங்கள்...பிரமாண்ட திரையில் ஒளிபரப்பா?

சென்னையில் இனி மெட்ரோ நிலையங்களிலும்  ஐபிஎல் போட்டி ஒளிபரப்பபடும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 

கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை ஐபிஎல்க்கு மட்டும் தனி அளவில் அதிகப்படியான ரசிகர்கள் இருப்பதாக சொல்லலாம். ஏனென்றால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி பார்க்க கூடிய ஒன்று. அதிலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் ரசிகர்களுக்காக ஐபிஎஸ் தொடரை சென்னையில் ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய சாலைகளின் நடுவே பிரமாண்ட திரை அமைத்து ஒளிபரப்பு செய்து வருகின்றனர். அந்தவகையில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியை தற்போது சென்னையில் உள்ள 5 மெட்ரோ நிலையங்களிலும் ஐபிஎல் போட்டி ஒளிபரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 அணிகள் பங்கேற்கும் 16 ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 31 ஆம் தேதி ஆரம்பமானது. அதன்படி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்  முதல் போட்டி நடைபெற்றது. அதில் குஜராத் டைட்டன்சும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது, ஆனால் தனது முதல் போட்டியிலேயே சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த அணிகள் இரண்டாம் நாளான நேற்றைய தினம் களமிறங்கியது. 

இதையும் படிக்க : ஐபிஎல் திருவிழா இன்று கோலாகல ஆரம்பம்...எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இந்நிலையில் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி சென்னை சேப்பாக்க ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியை சென்னையில் உள்ள 5 மெட்ரோ நிலையங்களில் ஒளிப்பரப்பு செய்யப்படவுள்ளதாக சென்னை மெட்ரொ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்  மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகியவை இணைந்து சென்னையில் நடைபெறும் அனைத்து போட்டிகளையும் ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளன. அதன்படி, நந்தனம், வடபழனி, விம்கோ நகர், திருமங்கலம் மற்றும் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ஆகிய 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் திரையிடப்படவுள்ளன. போட்டிகளைக் காண தனிக்கட்டணம் இல்லை என்றும் நிலையத்தில் சாதாரண பயணத்திற்கும்  நிலையங்களில் ஒரு மணி நேரம் தங்குவதற்கும் பத்து ரூபாய் மட்டுமே கட்டணம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் நடக்கும் போட்டி நாட்களில் கிரிக்கெட் ரசிகர்கள் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் மலிவு போக்குவரத்து விருப்பங்களை வழங்குவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஐபிஎல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்தாலும், மறுபக்கம் இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.