தீபாவளி வரை இலவச ரேஷன் பொருட்கள்,மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி: பிரதமர் மோடி பேசிய முழு விவரம் இதோ...

தீபாவளி வரை இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

தீபாவளி வரை இலவச ரேஷன் பொருட்கள்,மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி: பிரதமர் மோடி பேசிய முழு விவரம் இதோ...

இந்தியாவில் கொரனோ 2-வது அலை பாதிப்பு குறைந்து வரும் சூழலில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மாலை 5 மணி அளவில் உரையாற்றினார்.அப்போழுது பேசிய பிரதமர், 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகப்பெரும் தொற்று மக்களை பாதித்துள்ளது என்றும் கொரோனாவால் நம்மில் பலர் அன்புக்குரியவர்களை இழந்து இருக்கிறோம் என்றார்,தீபாவளி வரை நட்டு மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் எனவும், இதன் மூலம் 80 கோடி மக்கள் பயனடைவார்கள் எனவும் பிரதமர் தனது உரையில் கூறியுள்ளார்.

 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம். அனைத்து கட்டமைப்புகளும் பயன்படுத்தி ஆக்சிஜனை அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சென்றுள்ளோம் என பேசிய பிரதமர் மோடி,இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பல லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

கொரோனாவால் உறவுகளை இழந்த அனைவருக்கும் ஆறுதல் தெரிவித்து கொள்வதாகவும்,ஏப்ரல் ,மே மாதங்களில் ஆக்சிஜனுக்கு பெருமளவு தேவை ஏற்பட்டது அதனை ரயில்,விமானம் மூலம் ஆக்சிஜன் வழங்கி பற்றாக்குறையை மத்திய அரசு நீக்கி உள்ளதாக கூறினார்.

நாட்டு மக்கள் அனைவரும் தொடர்ந்து முக கவசம் அணிதல் சமூக இடைவெளி போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் அதனை கைவிட்டு விடக்கூடாது என நாட்டு மக்களுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.

கொரோனாவுக்கு எதிரான போரில் உலக அரங்கில் இந்தியா முன் களத்தில் நின்று போராடி வருகிறது.கொரோனா நமது மிகப் பெரிய எதிரியை வீழ்த்த நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான். தடுப்பூசி இதற்கு முன் இல்லாத வகையில் விரைவாக உற்பத்தி செய்து பயன்படுத்துகிறோம் என பேசினார்.

மாநிலங்கள் இனிமேல் தடுப்பூசிக்காக செலவு செய்ய தேவையில்லை என்றும், ஜூன் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்க தொடங்கும் என்றார்,இந்தியாவில் உற்பத்தியாகும் தடுப்பூசிகளில் 75 சதவிகிதத்தை மத்திய அரசு வாங்கி மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என்றும், மீதம் 25% தடுப்பூசிகளை தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

 மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பூசிஅனுமதிக்கப்பட்டால் நமது தடுப்பூசிபோடும் வேகம் இன்னும் அதிகரிக்கும்.மேலும் 3 தடுப்பூசிகள் தற்போது சோதனை கட்டத்தில் உள்ளன. தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் மொத்தம் 7 கம்பெனிகள் தடுப்பூசிஉற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. குழந்தைகளிடம் தடுப்பூசி சோதனை செய்வதும் தொடங்கி உள்ளது.