இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை..!

இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை..!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வர, இனி விசா தேவையில்லை என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இந்தியா மட்டுமின்றி சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய 6 நாடுகளில் இருந்தும் இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சரவை ஒப்புதலுடன் இந்த திட்டம் அடுத்த மார்ச் 31 தேதி வரை சோதனை முயற்சியாக அமல்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை, சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார தீர்வை நோக்கி நகரும் விதத்தில் இந்த திட்டத்தை அமல்படுத்தி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிக்க   |  பெண்களுக்கான பாதுகாப்பான நகரம்: ஆய்வில் சென்னைக்கு கிடைத்திருக்கும் இடம் என்ன தெரியுமா..?