மூன்று நபர்களுக்கு மரண தண்டனை!!

2019 ஆம் ஆண்டிற்கு பின் முதல் முறையாக மூன்று பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது

மூன்று நபர்களுக்கு மரண தண்டனை!!

குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூன்று நபர்களுக்கு இன்று மரண தண்டனையை ஜப்பான் நிறைவேற்றியது. கிஷிடா-கியோடா ஜப்பான் நாட்டில் பிரதமராக பதவி ஏற்றபின் அவர் வழங்கப்பட்ட முதல் மரண தண்டனை என்பது குறிபிடத்தக்கது.

அந்நாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரை படுகொலை செய்த நபருக்கு மரண தண்டனையை வழங்கியது.அதன்பின் தற்போது அவை நிறைவேற்றப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

தூக்கிலிடப்பட்ட மூன்று பேரின் விவரங்களை குறித்து எவ்வித தகவலையும் அதிகாரிகள் குறிப்பிடவில்லை.அந்நாட்டின் நீதித்துறை அமைச்சராக பதவியேற்ற யோஷிஹிசா புருகாவா உத்தரவின் பேரில் அவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே யோஷிஹிசா புருகாவா தனது பதவியை ஏற்கும் போதே கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் விதமான கொடூர குற்றத்தை செய்தவருக்கான மரண தண்டனை அளிப்பதை தவிர்க்க முடியாது என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் நாட்டில் மனித உரிமை குழுக்கள்  மற்றும் இதனை பற்றிய விமர்சனங்கள் அதிகம் பேசப்பட்ட போதிலும் பொதுமக்களிடையே மரண தண்டனைக்கான ஆதரவுகள் பெருகி வருவதாக தெரிவிக்கின்றனர்.