ஹைதி நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

ஹைதி நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது.

ஹைதி நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்  7 புள்ளி 2 ஆக பதிவானது. ஹைதியின் போர்ட்-அயு- பிரின்ஸில் இருந்து 118 கி.மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 29 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டை புரட்டிப் போட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.