ஆல்பா மற்றும் டெல்டா வகை வைரஸ்களுக்கு எதிராக சிறப்பாக செயலாற்றும் கோவாக்சின் தடுப்பூசி...

ஆல்பா மற்றும் டெல்டா வகை கொரோனா வைரஸ்களுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயலாற்றுவதை அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் கண்டறிந்துள்ளது.

ஆல்பா மற்றும் டெல்டா வகை வைரஸ்களுக்கு எதிராக சிறப்பாக செயலாற்றும் கோவாக்சின் தடுப்பூசி...

 இதுதொடர்பாக நடத்தப்பட்ட இரு வேறு ஆய்வுகளில், கோவாக்சின் ஆல்பா மற்றும் டெல்டா தொற்றுக்கு எதிராக உடலில் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்து, வைரஸ்களை செயலிழக்க செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கோவாக்சின் தடுப்பூசி செலுத்திய மக்களின் ரத்த திரவத்திலிருந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இவை 78 சதவீதம் பயனளிப்பதாகவும், இதனுடன் கேன்சர் உள்ளிட்ட சிகிச்சைக்கு பயன்படுத்தும் துணை தடுப்பு மருந்தினை பயன்படுத்தினால் கோவாக்சின் நூறு சதவீதம் பயனளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.