ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் - ஜோ பைடன் வலியுறுத்தல்

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் - ஜோ பைடன் வலியுறுத்தல்

 உக்ரைன் மீது ரஷிய ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக புச்சா நகரில் கொத்துக்கொத்தாக மக்கள் இறந்து கிடந்தது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் போர்க் குற்றம் புரிந்திருப்பதாக பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இதனை ரஷியா தரப்பு மறுத்துள்ளது.

இதனிடைய, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு போர் குற்றவாளி என்றும், அவருக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தி உள்ளார்.