மிக முக்கியம்.. ரஷ்யா - உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அமைதி பேச்சுவார்த்தை.. போர் முடிவுக்கு வருமா?

போர் நிறுத்தம் தொடர்பாக, ரஷ்யா மற்றும் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்கள், துருக்கியில் இன்று சந்தித்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

மிக முக்கியம்.. ரஷ்யா - உக்ரைன்  வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அமைதி பேச்சுவார்த்தை.. போர் முடிவுக்கு வருமா?

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் தீவிரமடைந்துள்ளது. 

உக்ரைனின் முக்கிய நகரங்களைப் பிடிக்க ரஷ்யப் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டுவர இருநாடுகளும் முயன்று வருகின்றன. 

இதன் ஒருபகுதியாக, ரஷ்யா - உக்ரைன் நாட்டு உயர் அதிகாரிகள் நடத்திய 3 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இந்நிலையில், துருக்கியில் உள்ள அண்டாலியா நகரில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா ஆகியோர் சந்தித்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த பேச்சுவார்த்தை மிக முக்கியமான ஒன்று என ரஷ்யா தெரிவித்துள்ளது. 

இதேபோல், ஆக்கப்பூர்வமான அனைத்து முயற்சிகளையும் உக்ரைன் எடுக்கும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அமைதி பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படும் நிலையில், போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.