மாதிரி நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு ?

மாதிரி நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாதிரி நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு ?

நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 19ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடரில், பெகாசஸ் மென்பொருள் மூலம், முக்கியப் பிரமுகர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் இதுதொடர்பாக இதுவரை விவாதம் நடத்த அனுமதி அளிக்கப்படாததால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவதால், 10 நாட்களாக அலுவல்கள் எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையில், நாளை எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளன.

இந்தக் கூட்டத்தில், ராகுல் காந்தியும் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தின் முடிவில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டிக்கும் விதமாக பல்வேறு விதங்களில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. அதேவேளையில் நாடாளுமன்ற வளாகத்திற்குள்ளேயே, மாதிரி நாடாளுமன்றத்தை நடத்துவது குறித்தும் முடிவு எடுக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.