7 வயது குழந்தைக்கு ஒமிக்ரான்...தெலுங்கானா சுகாதாரத்துறை தகவல்...!!

இந்தியாவில் 7 வயது குழந்தைக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெலுங்கானா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

7 வயது குழந்தைக்கு ஒமிக்ரான்...தெலுங்கானா சுகாதாரத்துறை தகவல்...!!

உலகத்தின் பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு வரும் நிலையில் 11 ரிஸ்க்கு ( Risk ) நாடுகளிலிருந்து இந்தியா வரும் சர்வதேச பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

இருப்பினும் 8 மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று தெலுங்கானா மாநில சுகாதாரத்துறை மேலும் 3 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் 7 வயது குழந்தைக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கென்ய நாட்டைச் சேர்ந்த சர்வதேச பெண் பயணி ஒருவருக்கும், சோமாலியா நாட்டைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் ( Non Risk ) நாடுகளில் இருந்து  ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தபோது ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹைதராபாத் உள்நாட்டு விமான முனையத்தில் இருந்து மேற்குவங்கம் சென்ற பயணி ஒருவரின் 7 வயது குழந்தைக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்குவங்க மாநில அரசு உஷார்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட 7 வயது குழந்தையை கண்காணிக்குமாறும்; குழந்தையுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்யுமாறு தெலுங்கானா அரசு மேற்குவங்க அரசை அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் முதன்முறையாக இந்தியாவில் 7 வயது குழந்தைக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.