ஹாமூன் அதிதீவிர புயலின் புதிய அப்டேட்...!

வங்க கடலில் உள்ள மிகதீவிர புயல் ஹாமூன் வடமேற்கு மற்றும் அதை ஒட்டி வடகிழக்கு வங்க கடலில் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 23 கிமீ வேகத்தில் கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்தது வருகிறது.
 
மேலும் இது பாரதீப்பில் ஒடிசா கிழக்கே 330 கிமீ  தொலைவில், (மேற்கு வங்காளம்) திகாட்டின் கிழக்கு-தென்கிழக்கே 290 கிமீ தொலைவிலும், கெபுபராவில் இருந்து 190 கிமீ தெற்கே பங்களாதேஷ் மற்றும் சிட்டகாங்கிலிருந்து தென்மேற்கில் 305 கிமீ தொலைவில் உள்ளது. 
 
இது அடுத்த 6 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழந்து புயலாக மாற வாய்ப்புள்ளது. மேலும்,  இது வடகிழக்கு நோக்கி நகரும் போது மேலும் வலுவிழந்து தெற்கே அருகில் பங்களாதேஷ் கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது
 
நாளை அதிகாலை தரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் 80 முதல் 90 கி.மீ. வேகத்திலும் இடையே 100 கிலோமீட்டர் வேகத்தில் கூட காற்று வீசும்.
 
அடுத்த 5 நாட்களுக்கு  தென்னிந்தி பகுதியான கேரளா மற்றும் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் மின்னலுடன் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கூறப்படுகிறது.