வழக்கறிஞர்களுக்கு கட்டணம் செலுத்த பணம் வேண்டும் - நீதிமன்றத்தில் மல்லையா மனு

வழக்கறிஞர்களுக்கு கட்டணம் செலுத்த பணம் வேண்டும் - நீதிமன்றத்தில் மல்லையா மனு

இந்தியாவில் வழக்கறிஞர்களுக்கு கட்டணம் செலுத்த பணம் வழங்க வேண்டும் என்று தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்து நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கிவிட்டு இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். அவரது சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ள நிலையில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடைமுறைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் உள்ள தனது வழக்கறிஞர்களுக்கு செலுத்துவதற்காக லண்டனில் உள்ள நீதிமன்ற நிதி அலுவலகத்தில் இருந்து 7.8 கோடி ரூபாய் வழங்க கோரி இங்கிலாந்து நீதிமன்றத்தில் விஜய் மல்லையா விண்ணப்பம் அளித்துள்ளார்.