நாடு முழுவதும் களைகட்டி வரும் நவராத்திாி விழா...!

துா்கா பூஜையையொட்டி மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் அமைக்கப்பட்டுள்ள எகிப்து நாட்டின் பிரசித்தி பெற்ற பிரமீடுகளை பொதுமக்கள் கண்டு ரசித்தனா்.

நாடு முழுவதும் நவராத்திாி திருவிழா தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் 7-ம் நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள தபி ஆற்றங்கரையில் மகா ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். 

மேலும் சூரத் பகுதியில் உள்ள G9 கர்பா மைதானத்தில் ஏராளமான ஆண்கள், பெண்கள் இணைந்து வண்ண வண்ண உடை அணிந்து கா்பா நடனமாடி அசத்தினா்.

இதேபோல் கொல்கத்தாவில் நடைபெற்ற துா்கா பூஜையின்போது கண்ணைக் கவரும் வகையில் எகிப்து நாட்டின் பிரசித்தி பெற்ற பிரமீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனா். மேலும் துர்கா தேவி சிலை மற்றும் பண்டைய கால மம்மி சிற்பங்களை பொதுமக்கள் ஆச்சாியத்துடன் பாா்வையிட்டனா். 

ஒடிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில் நடைபெற்ற துா்கா பூஜையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் துர்கா தேவியை வழிபட்டார். அப்போது அவா் ஆரத்தி எடுத்து சாமி தாிசனம் செய்தாா். முன்னதாக அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.