நாரதா நிதிநிறுவன மோசடி வழக்கு: மம்தா பானர்ஜி பிரமாணப் பத்திரம் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு...

நாரதா நிதிநிறுவன மோசடி வழக்கில்  சிபிஐ காவல்துறையினரால் அம்மாநில முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்ட போது, முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் செயல்பாடு குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.

நாரதா நிதிநிறுவன மோசடி வழக்கு: மம்தா பானர்ஜி பிரமாணப் பத்திரம் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு...

நாரதா  நிதிநிறுவன ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிர்ஹத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்ட போது, திரிணாமுல் காங்கிரஸ்கட்சியினர் தங்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களை தூண்டி விட்டதாகவும் சிபிஐ தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது.

 இதனிடையே இது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மம்தா பானர்ஜி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்த நிலையில் அதனை ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் மறுத்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அனுமதி வழங்கிய நிலையில் நேற்று மம்தா பானர்ஜி அதைத் தாக்கல் செய்தார். இதனிடையே இந்த பிரமாணப் பத்திர வழக்குக்கான தீர்ப்பை கொல்கத்தா உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.