மணிப்பூர் கலவரம் - அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

மணிப்பூர் கலவரம் - அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

மணிப்பூர் கலவரத்தின் ஒரு பகுதியினராக குகி பழங்குடியினருக்கு ராணுவப் பாதுகாப்பு வழங்கக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 


மணிப்பூரில் குகி பழங்குடியினருக்கும், பழங்குடி உரிமை கோரிய மெய்டி இனத்தவர்களுக்கும் வெடித்த கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தொடர்ந்து, வன்முறையை கட்டுப்படுத்துவதற்கு அரசால் உறுதியளிக்கப்பட்ட பின்னரும், 70 பழங்குடியினர் கொல்லப்பட்டதாக தெரிவித்து, குகி பழங்குடியினருக்கு ராணுவப் பாதுகாப்பு வழங்கக் கோரி அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதையும் படிக்க : தமிழக மீனவர்கள் கைது: சிங்களப் படையினருக்கு எதிராக அன்புமணி கண்டனம் !

இந்நிலையில் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மணிப்பூர் கலவரம் முழுக்க முழுக்க சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்டது எனக்கூறிய உச்சநீதிமன்றம், குகி பழங்குடியினருக்கு ராணுவப் பாதுகாப்பு வழங்கக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் கோடை விடுமுறைக்குப்பின், ஜூலை 3ம் தேதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.