நந்திமலையில் நிலச்சரிவு- சுற்றுலா பயணிகள் செல்ல தடை

பெங்களூரு அருகே பிரபல சுற்றுலாத் தலமான நந்தி மலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.

நந்திமலையில் நிலச்சரிவு- சுற்றுலா பயணிகள் செல்ல தடை

பெங்களூரு அருகே உள்ள மிகப் பிரபலமான நந்தி மலை பகுதியில் நேற்று இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. நேற்று இரவு ஒரே நாளில் 84 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது கடந்த பத்து வருடங்களில் இல்லாத அளவுக்கு கன மழை என பதிவாகி உள்ளது.

கனமழையின் காரணமாக மலையின் மீது செல்லும் பத்தாவது கொண்டை ஊசி வளைவில் மிகப் பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டு பெரிய பாறைகள் சரிந்து விழுந்துள்ளதால் சாலைப்போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

மண் சரிவை சரி செய்ய 4 ஜேசிபி வாகனங்கள் கொண்டு சிக்பலாபூர் மாவட்ட நிர்வாகம் சாலையை சரிசெய்யயும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை முழுவதுமாக சரி செய்யும் வரை சுற்றுலா பயணிகள் நந்தி மலை மீது செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.