யாரையும் சும்மா விடமாட்டேன்: மிரட்டும் நவ்ஜோத் சிங் சித்து...

யாரையும் சும்மா விடமாட்டேன் என்ற நவ்ஜோத் சிங் சித்து-வின் மிரட்டலை தொடர்ந்து பஞ்சாப் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் இன்று ராகுல் காந்தியை சந்தித்து பேசியுள்ளார்.

யாரையும் சும்மா விடமாட்டேன்: மிரட்டும் நவ்ஜோத் சிங் சித்து...

பஞ்சாப் காங்கிரசில் நீண்ட நாட்களாக அடித்து வந்த புயல் சமீபத்தில்தான் ஓய்ந்தது. இந்த நிலையில் தற்போது புதிய புயல் ஒன்று கிளம்பியுள்ளது. அதாவது மாநில தலைவராக நியமிக்கப்பட்ட நவ்ஜோத் சிங் சித்துவின் ஆலோசகர்கள் இருவர், காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் குறித்த சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டிருந்தது தான் புயலுக்கு காரணம்.

கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் கருத்துகளை கூறிய இருவரையும் கட்சியிலிருந்து நீக்குமாறு பஞ்சாப் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் வலியுறுத்த தம்மை  சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காவிட்டால் யாரையும் சும்மா விடப்போவதில்லை என நவ்ஜோத் சிங் சித்து மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால் சம்பந்தப்பட்டவர்களை சித்து நீக்காவிட்டால் தாம் நீக்கப்போவதாக ஹரிஷ் ராவத் கூறியுள்ளார்.இந்த நிலையில் இது குறித்து ஏற்கெனவே சோனியாவை சந்தித்து ஆலோசனை நடத்திய சித்து, இன்று ராகுலையும் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.