நச்சு நுரை படலத்துக்கு இடையே புனித நீராடிய பெண்கள்

டெல்லியில் சத் பூஜையின் முதல் நாளை முன்னிட்டு மக்கள் யமுனையில் நச்சு நுரைக்கு மத்தியில் புனித நீராடி வழிபட்டனர்

நச்சு நுரை படலத்துக்கு இடையே புனித நீராடிய பெண்கள்

டெல்லியில் சத் பூஜையின் முதல் நாளை முன்னிட்டு மக்கள் யமுனையில் நச்சு நுரைக்கு மத்தியில் புனித நீராடி வழிபட்டனர்.

சூரியக் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆண்டு தோறும் இந்துக்களால் சத் பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். இவ்விழா வட மாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படும்.

இந்நாளில் மக்கள் நீர் நிலைகளுக்கு சென்று புனித நீராடி சூரிய பகவானை வழிபடுவர். நான்கு நாட்கள் நடைபெறும் சத் பூஜை விழா இன்று துவங்கியுள்ளது.

ஆனால் டெல்லியில் தொழிற்சாலை கழிகள் யமுனையில் கலப்பதால் நச்சு நுரை ஏற்பட்டு நதி முழுவதும் நுரை படலமாகவே காட்சியளிக்கிறது. இருந்த போதிலும் சத் பூஜையை முன்னிட்டு நச்சு நுரை படலத்தையும் பொருட்படுத்தாது ஏராளமான பெண்கள் யமுனையில் புனித நீராடினர்.