ஸ்டியரிங் இல்லாத அமைப்பில் கூகுள் கார்!

மினிவேன் தோற்றத்தில் மின்சாரம் மூலம் இயங்கும் காரை வடிவமைத்துள்ளனர்.

ஸ்டியரிங் இல்லாத அமைப்பில் கூகுள் கார்!

ஆட்கள் ஓட்டும் காருக்கு, தானோட்டி திறமையைக் கொடுத்து, ஒரு தனி வாடகைக் கார் சேவையை துவங்கியது 'வேமோ!' கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டிற்கு சொந்தமான வேமோ, 2020 அக்டோபரில், அமெரிக்காவின் பீனிக்ஸ் நகரில் இந்த சேவையை துவங்கியது.அப்போது, கிரைஸ்லர் பசிபிகா என்ற பெரிய பெட்ரோல் காரையே வேமோ தன் தானோட்டி சோதனைகளுக்குப் பயன்படுத்தியது.ஆனால், அண்மையில் அது புத்தம் புதிய மின்சார காரை, தானோட்டி சேவைக்கென்றே வடிவமைத்து அறிமுகப்படுத்தியது. அதில், வாகன ஓட்டிக்கான ஸ்டியரிங் இல்லை.

'ஆக்சிலரேட்டர், பிரேக்' போன்றவையும் இல்லை. ஆம், அந்த வண்டியில் அனைவருமே பயணியர்தான்.பெரிய அளவிலான மினிவேன் மாடலில் இருக்கும் வேமோ தானோட்டி, பயணியர் வசதிக்காக, தாழ்வான தளத்தையும், அகலமான கதவுகளையும் கொண்டுள்ளது.இந்த காரை ஸ்வீடனில் உள்ள ஒரு முகமை, வடிவமைப்பு செய்ய, அதை தயாரிக்கும் வேலையை, சீனாவிலுள்ள ஜீலி என்ற வாகன தயாரிப்பாளர்கள் உற்பத்தி செய்ய உள்ளனர். வேமோவின் தானோட்டியை செலுத்துவது ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருள் தான், அது இதுவரை, தானோட்டியாகவே 3.2 கோடி கி.மீ., துாரம் அசல் சாலைகளில் ஓட்டியிருக்கிறது.

இத்தனை துாரம் பல நுாறு வாகனங்கள் ஓட்டு னரில்லாமல், தானாகவே ஓட்டியும் உயிர் பலி கொண்ட விபத்துகள் ஏதும் நிகழவில்லை.ஐந்தாறு சிறு விபத்துக்கள் மட்டுமே நடந்துள்ளள. இந்த சிராய்ப்புகள் கூட, ஓட்டிவந்த மனித ஓட்டுநர்களின் தவறுதான் என்கிறது வேமோ.