பொரி உற்பத்தி தீவிரம்; மானியம் வழங்க அரசுக்கு கோரிக்கை !

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஆயுத பூஜையையொட்டி,பொரி உற்பத்தி தீவிரம் அடைந்துள்ளது.

திருப்பூரில் உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஏரிப்பாளையம், கொமரலிங்கம், பாப்பன்குளம் உள்ளிட்ட கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் பொரி, பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

இதையும் படிக்க : நடிகை"ஜெயப்பிரதா 15 நாட்களில் சரணடைய வேண்டும்" உயர் நீதிமன்றம் உத்தரவு!

கடந்த ஆண்டு 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரிசி, தற்போது 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறும் பொரி உற்பத்தியாளர்கள், மூலப் பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக 110 லிட்டர் கொண்ட பொரி மூட்டை, 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், பாரம்பரியமாக பொரி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தங்களுக்கு அரசு உரிய மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.