கொரோனா சிகிச்சைக்கான பொருட்களுக்கு இறக்குமதி வரிக்கு  விலக்கு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு...

கொரோனா சிகிச்சைக்கான பொருட்களுக்கு இறக்குமதி வரிக்கு  விலக்கு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு...

கொரோனா சிகிச்சைக்கான பொருட்களுக்கு இறக்குமதி வரிக்கு  விலக்கு அளித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி. 43வது கவுன்சில் கூட்டம் எட்டு மாதங்களுக்கு பின்னர் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கிய கூட்டத்தில், மாநில நிதி அமைச்சர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தின் சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், முதல்முறையாக ஜி,எஸ். டி கூட்டத்தில் கலந்து கொண்டார்.கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் மருத்துவப் பொருட்களுக்கு, ஆகஸ்ட் 31ம் தேதி வரை இறக்குமதி வரிவிலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளும் வரிவிலக்கு பட்டியலில் சேர்க்கப்படும் என்றார்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் கொரோனா சிகிச்சை கருவிகள் மற்றும் மருந்துகளுக்கு வரிவிலக்கு அளிப்பது தொடர்பாக குழு அமைக்க முடிவு செய்துள்ளதாக கூறினார். இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்துக்கும் ஜிஎஸ்டி வரி இழப்பீட்டு தொகையை மத்திய அரசு மறுக்கப் போவதில்லை எனவும், அடுத்த கட்டமாக ஒரு லட்சத்து 58 ஆயிரம் கோடி கடனாக பெற்று மாநிலங்களுக்கு இழப்பீடாக வழங்கப்படும் என்றும் நிர்மலா சீதாரமன் தெரிவித்தார்.