திருப்பதியில் சப்ளையாராக மாறி கலைகட்டும் ரோபோ! ஹோட்டலுக்கு குவியும் வாடிக்கையாளர்கள்!

உணவு உபசரிக்கும் ரோபோக்களுடன் திறக்கப்பட்ட ஹோட்டலில் உணவருந்த குவிந்து வரும் வாடிக்கையளர்கள்.அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

திருப்பதியில் சப்ளையாராக மாறி கலைகட்டும் ரோபோ! ஹோட்டலுக்கு குவியும் வாடிக்கையாளர்கள்!

தொழில்நுட்ப வசதிகள் வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில் ரோபோக்களின் பயன்பாடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இவை கல்வி நிறுவனங்கள், மால்கள் , ஆராய்ச்சி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் ஹோட்டல்கள் முதல் வீடு வரை எனவும், வர்த்தக ரீதியாகவும் இந்தியாவில் ரோபோக்கள்  பயன்படுத்தப்பட்டு  வருகின்றனர்.

இதற்கிடையே ஆந்திர மாநிலமான திருப்பதியில் ஏர் பைபாஸ் சாலையில் ”ரோபோ டின்னர்” என்னும் உணவகம் சப்ளையாரக மனிதர்களுக்கு மாற்றாக விசித்திரமாக  ரோபோக்களை வைத்து திறக்கப்பட்டது. இதை அமைச்சர் பெட்டி ரெட்டி ராமச்சந்திர ரெட்டி திறந்து வைத்துள்ளார். 

இந்த உணவகத்தில் உணவு ஆர்டர் செய்ததும் பெண் ரோபோக்கள் உணவை எடுத்து வந்து பரிமாறி செல்கின்றன. மேலும் இது தொடர்பாக அவ் உணவகத்தின் மேலாளர் பாரத் குமார் ரெட்டி என்பவர் கூறுகையில், எங்கள் உணவகத்தில் ரோபோக்களை கொண்டு மட்டுமே உணவு பரிமாறப்பட்டு வருவதாகவும், வாடிக்கையாளர்கள் அவர்களது இடத்தில் அமர்ந்த படியே ‘டேப்’ மூலம் உணவுகளை ஆர்டர் செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

ஆர்டர் செய்த சில நிமிடங்களில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை ரோபோக்கள் மூலம் வாடிக்கையளர்களுக்கு உபசரிக்கபடுவதாக கூறினார். மொத்தம் 12 ரோபோக்களை வைத்து ஹோட்டல் நடத்தி வருவாதாக தெரிவித்த அவர் இவை சற்று விலையில் அதிகரித்து இருப்பினும்  உணவருந்த வரும் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் நோக்கத்தில் இதனை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார்.

இந்த ரோபோக்கள் உணவகத்திற்கு வரும் குழந்தைகள் மத்தியில் சிறந்த வரவேற்ப்பை பெற்றுள்ளதாகவும்,  ரோபோக்கள் இருப்பதன் மூலம் உணவகத்தை தேடி வந்து வாடிக்கையளர்கள் உணவருந்துவதாக கூறியுள்ளார்.

இது போன்று ரோபோக்களை கொண்டு உபசரித்து வரும் உணவகம் ஒன்று ஓங்கோலே என்ற பகுதியில் செயல்பட்டு வருவதாகவும், அதனை கருத்தில் கொண்டு அதை போன்று நம் மக்களிடத்திலும் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் திருப்பதியில் “ரோபோ டின்னர்” அமைத்துள்ளதாகவும்  கூறினார்.