பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்படுபவர் சிறார் என்பதால் மட்டும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்படுபவர் சிறுவர்,  சிறுமியர் என்பதால் மட்டும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கர்நாடகாவை சேர்ந்த இரப்பா சிட்டப்பா என்பவர், கடந்த 2010ம் ஆண்டு 5வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக கூறி, கீழமை நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

இதனையே கர்நாடகா உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இதனை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு, குற்றவாளிக்கான தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து, 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.

மேலும் குற்றவாளி அருவருக்கத்தக்க குற்றங்கள் செய்திருந்தாலும், சமூக அச்சுறுத்தல்களுக்கு இத்தகைய தண்டனைகள் போதுமானதாக கருதுவதாக நீதிமன்றம் தெரிவித்தார்.