6 ஆண்டுகளுக்கு பின் முக்கிய மாநாடு... முதலமைச்சர்கள், தலைமை நீதிபதிகள் சந்திப்பு..!

வருகிற 30ம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாடு டெல்லியில் நடைபெற இருக்கின்றது. 6 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

6 ஆண்டுகளுக்கு பின் முக்கிய மாநாடு... முதலமைச்சர்கள், தலைமை நீதிபதிகள் சந்திப்பு..!

"ஒரு நாடு வளர்ச்சி பாதையில் செல்கிறது என்றால் அதில் மாநிலத்தின் பங்கு அதிகம்" இவ்வாறு பிரதமர் நரேந்திரமோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசியுள்ளார். இந்தியாவின் கட்டமைப்பு மற்றும் சட்டத்துறையை வலுப்படுத்த 6 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் 30ம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாநாடு நடைபெறவுள்ளது. இறுதியாக 2017ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னதாக 2016 ஏப்ரல் 24ம் தேதி இந்த மாநாடு நடைபெற்றுள்ளது. அதற்கு முன்னர் 2015ம் ஆண்டில் 2015ம் ஏப்ரல் 4ம் தேதியும், 2013ம் ஆண்டும் நடைபெற்றுள்ளது. 

நாட்டில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் முதலமைச்சர் மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திரமோடி தலைமை தாங்குவார். இந்த மாநாட்டில், நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்பார்கள். இதில்,மத்திய அரசுடன் மாநில அரசின் உறவுகள் குறித்தும், திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, உள்மாநில திட்டங்கள், மத்திய அரசின் நிதியுடன் கட்டமைக்கப்படும் மாநில திட்டங்கள், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை தவிர மாநில அரசுகள் தரப்பிலும் உள்ள பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டு ஆலோசிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. 2 நாள் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த மாநாட்டின் இறுதியாக அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் பிரதமர் நரேந்திரமோடி விருந்தளிக்க உள்ளார். 

நாடு முழுவதும் மொத்த 25 உயர்நீதிமன்றங்கள் உள்ளது. அதன் தலைமை நீதிகள் பங்கேற்கும் மாநாட்டை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைப்பார். இந்த மாநாட்டிற்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என். வி ரமணா மற்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ராஜு முன்னிலை வகிப்பார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் கருப்பொருளாக விரைவான நீதி வழங்குதல், கீழ் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், உயர்நீதிமன்றங்களின் காலி பணியிடங்களை பூர்த்தி செய்தல் உள்ளிட்டவையாக இருக்கும் என கூறப்படுகிறது. இவை தவிர இந்தியாவில் உச்சநீதிமன்றங்களின் கிளைகள் அமைப்பது தொடர்பான ஆலோசனையும் நிலுவையில் உள்ள நிலையில் அவை குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. முதலமைச்சர்களை போல அனைத்து மாநில தலைமை நீதிபதிகளுக்கும் பிரதமர் நரேந்திரமோடி விருந்தளிக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கிறது.
 
முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளப்பது. மேலும் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் தமிழக சட்டத்துறை முதன்மை செயலாளர் ஆகியோர் பங்கேற்ப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பாரா என்பது இன்னும் உறுதி செய்யப்பட வில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.