சைஃப் அலி கான் - கரீனா கபூரின் மகனின் பெயர் என்ன...? 6-ஆம் வகுப்பு தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் பெற்றோர்கள் அதிர்ச்சி...

போபாலில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் மற்றும் நடிகர் சைஃப் கலி கான் மகனின் முழு பெயர் என்ன என்று 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சைஃப் அலி கான் - கரீனா கபூரின் மகனின் பெயர் என்ன...? 6-ஆம் வகுப்பு தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் பெற்றோர்கள் அதிர்ச்சி...

போட்டித் தேர்வுகளிலும் சரி கல்வியாண்டு தேர்வுகளிலும் சரி அப்போதெல்லாம் கேட்கப்பட்ட கேள்விகள் அர்த்தம் கொண்டதாக இருக்கும். தேர்வு எழுதுவோரின் மூளையை கசக்க வைக்கும் விதமாக கேள்வி எழுப்பப்படும். மாணவர்களுக்கு விடையே தெரியாவிட்டாலும் கூட அதற்கு விடை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவர்களுக்குள் ஏற்படும். ஆனால், தற்பொழுதெல்லாம் ஒன்றுக்கும் பயனில்லாத உப்பு சப்பு இல்லாத கேள்வியெல்லாம் கேட்டு பெற்றோர்களை எரிச்சலடைய வைக்கின்றன.

இந்நிலையில், போபாலில் இயங்கி வரும் ஒரு பள்ளி மாணவர்களுக்கு பயனில்லாத கேள்வியை எழுப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில்  அகாதெமி ஹைட்ஸ் பப்ளிக் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. தற்போது 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு அங்கு தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த தேர்வில் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட   கேள்வித்தாளை பார்த்த பெற்றோருக்கு அதிர்ச்சி எழுந்தது. 

பொதுவாக தேர்வில் நாட்டு நடப்புகள் பற்றி தான் கேள்வித்தாள் அமையும். ஆனால், இந்த கேள்வித்தாளில் அதாவது நாட்டு நடப்புகள் பிரிவில் இந்தியாவில் செஸ் விளையாட்டில் முதல் கிராண்ட் மாஸ்டர் யார் என கேள்வி எழுப்பியுள்ளது. பாகிஸ்தான் அது போல் வான் வழி தாக்குதலின் போது பாகிஸ்தானில் விழுந்தது எந்த இந்திய விமான படை  என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் எந்த அணி வென்றது, வடகொரியாவின் அதிபர் யார் என அழகான 4 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. 

இப்படி 5 கேள்வி கொண்ட ஒரு பிரிவில் 4 வது கேள்விதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாலிவுட் நட்சத்திர தம்பதி கரீனா கபூர் மற்றும் சைஃப் அலி கான் தம்பதி மகனின் முழு பெயர் என்ன என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதை கண்டு  அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது போன்ற கேள்விகளுக்கு பதிலாக வரலாற்று சிறப்பு வாய்ந்தவர்கள் குறித்த கேள்விகளை கேட்டிருக்கலாம் என்று கோபமடைந்தனர்.

இதையடுத்து பெற்றோர்கள் மாவட்ட கல்வி அலுவலரின் கவனத்திற்கு இந்த கேள்வித்தாளை கொண்டு சென்றுள்ளனர். அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கவும், அந்த பள்ளியை மூட வேண்டும்  எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது போல் சினிமா மோகத்தை பற்றி  பிள்ளைகளிடம் ஒரு பள்ளி போதிக்கலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பள்ளியிடம் விளக்கம் கேட்டு மாவட்ட கல்வி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து அதன் பதிலை பொறுத்தே நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.