பிரம்மாண்டமாக நடைபெற்ற பாஸ்டில் விழா...ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் வானில் சாகசம்!

பிரம்மாண்டமாக நடைபெற்ற பாஸ்டில் விழா...ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் வானில் சாகசம்!

பிரான்ஸ் நாட்டின் பாஸ்டில் தினத்தையொட்டி நடைபெற்ற அணிவகுப்பில் ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் வானில் சாகசங்களை நிகழ்த்திக்காட்டின. 

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் பாரிஸ் சென்றடைந்த பிரதமர் மோடியை, அந்நாட்டு பிரதமர் எலிசபெத் போர்ன் நேரில் வரவேற்றார். தொடர்ந்து, இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் பின்னர், அதிபர் இம்மானுவேல் மேக்ரன் உடனான சந்திப்பின்போது, பிரதமர் மோடிக்கு, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான 'கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர் விருது வழங்கப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக, பிரான்ஸ் நாட்டின் தேசிய தின விழாவான 'பாஸ்டில் டே' கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். பாரிஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவின்போது, பிரான்ஸ் நாட்டின் முதல் பெண்மணி பிரிஜிட் மேக்ரான் மற்றும் பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர், அதிபர் இம்மானுவேல் மேக்ரன் பிரதமரை ஆரத்தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

இதையும் படிக்க : தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட தம்பதியினர்...காரணம் உள்ளே!

இதன் பின்னர் நடைபெற்ற அணி வகுப்பில், இருநாட்டு வீரர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது. அப்போது, இந்தியக் குழுவினர் 'சாரே ஜஹான் சே அச்சா' என வாத்தியங்களை இசைத்தவாறு சென்றதைத் தொடர்ந்து, முப்படை அணிவகுப்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் வானில் சாகனங்களை நிகழ்த்தின. இதனை பார்வையாளர்கள் உற்சாகமுடன் கண்டு ரசித்தனர். 

இதனிடையே, பிரதமர் மோடியின் பிரான்ஸ் வருகைக்கு பெருமிதம் தெரிவித்து அதிபர் இம்மானுவேல் மேக்ரன் டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "உலக வரலாற்றில் இதுஒரு முக்கியமான நிகழ்வு என்றும், பிரான்ஸ் நாட்டின் முக்கிய நட்பு நாடாக இந்தியா விளங்குகிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பாஸ்டில் அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்தியாவை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.