தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட உள்ளதாக அறிவிப்பு.. காரணம் என்ன.?

தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட உள்ளதாக அறிவிப்பு.. காரணம் என்ன.?

தேர்தல் நடைபெறவுள்ள உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் மோடியின் படம் நீக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.

இதனால் அங்கு உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்த 5 மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் படம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.