ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலில் 600 போ் உயிரிழப்பு...!

இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாத குழு நடத்திய ஏவுகணை தாக்குதலில் 600 போ் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது.

இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு அதிரடியாக ஏவுகணை தாக்குதலை நடத்தியது. திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி, அதிர்ச்சி ஏற்படுத்தியது. இஸ்ரேலும், பதில் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது. இதனால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேலில் நடந்த இந்த ஏவுகணை தாக்குதலில் பெண்கள், முதியவர்கள் என ஏராளமானோா் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனா்.

இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக டெல் அவிவ் நகருக்கான ஏர் இந்தியா விமானம் ஒரு வாரத்திற்கு ரத்து செய்யப்பட்டு உள்ளது. இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இஸ்ரேலில் தங்கியுள்ள நேபாள மாணவர்கள் 10 பேர் உட்பட இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழப்புகள் தொடரும் என்றும் அஞ்சப்படுகிறது.