அரசு கல்லூரியில் கூடுதலாக 2 பாடப்பிரிவுகள் தொடக்கம்..!

அரசு கல்லூரியில் கூடுதலாக 2 பாடப்பிரிவுகள் தொடக்கம்..!

செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் அரசு கல்லூரியில் கூடுதலாக மூன்று புதிய பாடப்பிரிவுகள் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலையரங்கம் அமைக்க கல்லூரி நிர்வாகம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, மாநிலங்களவை உறுப்பினர் வழக்கறிஞர் வில்சன் அவர்களிடம் கலந்து ஆலோசித்து வளர்ந்து வரும் பெரும்பாக்கம் பகுதியில் உள்ள அரசு கல்லூரி மென்மேலும் வளர்ச்சியடைய தன்னுடைய மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் ஒரு கோடி நிதி ஒதுக்கியுள்ளார். 

அதேபோல் சுமார் 1200 மாணவர்கள் படிக்கும் இந்த கல்லூரியில் கட்டப்படும் கலையரங்கத்தில் சுமார் 600 மாணவ மாணவிகள் அமரும் வகையில் பெரிதாக கட்ட வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் நிதியில் இருந்து ரூபாய் ஒரு கோடி நிதி ஒதுக்கி மொத்தம் இரண்டு கோடி மதிப்பீட்டில் கலையரங்கம் அமைக்கும் பணிக்காக அடிக்கல்நாட்டு நிகழ்ச்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் :- 

கல்லூரி நிர்வாகம் கோரிக்கை வைத்ததின் பேரில் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் கலையரங்கம் அமைக்கும் பணி துவங்கியது. 
அதேபோல் இன்று கல்லூரி நிர்வாகம் வளர்ச்சியடையும் இந்த பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் M.com, M.Sc Computer Science, M.Sc Mathematics ஆகிய மூன்று புதிய பாடப்பிரிவுகள் வரும் கல்வியாண்டில் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.  

அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் வழக்கறிஞர் நெல்சன் :-

கலையரங்கம் அமைக்க தன்னுடைய நிதியில் இருந்து ஒரு கோடி நிதி ஒதுக்கி கொடுத்தேன். இங்கு வந்த பிறகு குளிர்சாதன, கழிவறை உள்ளிட்டவைகளை அமைக்க மேலும் ஒரு கோடி நிதி வழங்க கல்லூரி நிர்வாகம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து கல்லூரி வளர்ச்சிக்காக தன்னுடைய நிதியில் இருந்து மேலும் ஒரு கோடி நிதி ஒதுக்கி தருகிறேன் என்று கூறினார். 

உடன் எம்.பி.கள் வில்சன், தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் உள்ளனர்.

அதை தொடர்ந்து அருகில் அதே பகுதியில் ரூபாய் 51 கோடியில் புதிதாக கட்டப்பட்ட வரும் அரசு மருத்துவமனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

இதையும் படிக்க   |  ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு: அரசு அளித்த வாக்குறுதி என்ன ஆனது.?