ஓமிக்ரான் இந்தியாவில் பரவினால்....நாளொன்றுக்கு 14 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்....வி.கே.பால் எச்சரிக்கை....!!!

இங்கிலாந்தை போல இந்தியாவில் ஓமிக்ரானின் தொற்று பரவல் அதிகரித்தால், ஒவ்வொரு நாளும் 14 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படலாம்

ஓமிக்ரான் இந்தியாவில் பரவினால்....நாளொன்றுக்கு 14 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்....வி.கே.பால் எச்சரிக்கை....!!!
உலக அளவில் கொரோனாவின் பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக இங்கிலாந்தில் கொரோனா பரவல் வேகம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அந்நாட்டில் நேற்று ஒரேநாளில் 93 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகளை இங்கிலாந்து தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் வேகமாக ஓமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. 11 மாநிலங்களில் இதுவரை 113  பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் இந்தியாவில் பரவி வரும் ஒமிக்ரான் தொற்று தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில்  நிதி ஆயோக்கின் உறுப்பினர்  டாக்டர் விகே பால் கூறுகையில்,  ஓமிக்ரான் தொற்றால் ஐரோப்பிய நாடுகள் மிகவும் மோசமான சூழலை சந்தித்து வருகின்றனர் என்றார். மேலும் இங்கிலாந்தை போல இந்தியாவில் ஓமிக்ரானின் தொற்று பரவல் அதிகரித்தால், ஒவ்வொரு நாளும் 14 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என்று எச்சரித்தார்.