மகாராஷ்டிராவில் கோர விபத்து... அதிகாலையில் நிகழ்ந்த சோகம்!

மகாராஷ்டிராவில் கோர விபத்து... அதிகாலையில் நிகழ்ந்த சோகம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில், புனே நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில், 26 பயணிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் எவாத்மா பகுதியில் இருந்து, புனே நோக்கி தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்த சொகுசு பேருந்தில், 33 பேர் பயணித்துள்ளனர். 

இன்று அதிகாலை 2 மணியளவில், புல்தனா பகுதியில் உள்ள சம்ருதி மகாமார்க் தேசிய நெடுஞ்சாலையில், பிம்பால்குடா கிராமம் அருகே பேருந்து வந்து கொண்டிருந்த போது, லேசான மழை பெய்துள்ளது. அப்பொழுது, எதிர்பாரா விதமாக பேருந்தின், டயர் வெடித்ததில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதில், எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தில் மோதி, சாலையின் தடுப்பு வெளியில் மோதி உருண்டுள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் விபத்து நடந்துள்ளது.

பேருந்து விபத்துக்குள்ளான சில வினாடிகளில், தீ பற்றி பேருந்து முழுவதும், பரவியுள்ளது. பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் அயர்ந்து உறங்கியதால், வெளியேற முடியாமல், தீயில் சிக்கி 26 பயணிகள் பலியாகினர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு புல்தானா சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அதிகாலையில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில், 26 பலியாகிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுமென அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

இதே போல், விபத்து தொடர்பாக இரங்கல் பதிவை வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணத்தையும் அறிவித்தார்.

இதையும் படிக்க || சென்னை - தூத்துக்குடி சிறப்பு ரயில்!