பாஜக-வை வீழ்த்த செம்ம ப்ளான் வைத்திருக்கும் சோனியா காந்தி…  

பாஜக-வை வீழ்த்த செம்ம ப்ளான் வைத்திருக்கும் சோனியா காந்தி…   

காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் இன்று நடைபெற உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், பா.ஜ.க, அரசுக்கு எதிராக யுக்திகள் வகுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

வரும், 2024ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், பா.ஜக.,வை வீழ்த்தும் வகையில், ஒரு வலுவான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. எனினும், கட்சிகளுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே கூட்டணியில் இடம்பெறுவது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கூட்டணி அமைக்கும் முயற்சியாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க, தேசியவாத காங்கிரஸ், தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே, தமிழக முதலமைச்சரும், தி.மு.க., தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளான இன்று நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பா.ஜ.க, அரசுக்கு எதிராக யுக்திகள் வகுக்கப்பட உள்ளதாக, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.