வீட்டை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட பெயிண்டருக்கு அடித்த அதிர்ஷ்டம்; லாட்டரியில் ஒரு கோடி கிடைத்ததால் அதிர்ச்சி:

கடனில் மூழ்கி வீட்டை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பெயிண்டிங் தொழிலாளி, வீட்டை விற்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு பெரிய ஜாக்பாட் அடித்திருக்கிறது.

வீட்டை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட பெயிண்டருக்கு அடித்த அதிர்ஷ்டம்; லாட்டரியில் ஒரு கோடி கிடைத்ததால் அதிர்ச்சி:

கேரள மாநிலம் காசர்கோடு, பரவூர் பகுதியை சார்ந்தவர் முகமது  பாவா (Muhammad Bawa). இவர் பெயிண்டிங் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு மனைவி உட்பட ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.

சமீபத்தில் வீடு வைத்ததும் மற்றும் பிள்ளைகளின் திருமணம் போன்றவற்றால் பாவா 40 - லட்சம் ரூபாய் கடனில் இருந்து தவித்து வந்துள்ளார்.கடன் கொடுத்தவர்களின் தொல்லையால் கடந்த ஞாயிறு தான் குடியிருக்கும் வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று  இரண்டரை மணி அளவில் மஞ்சேரி பகுதியில் உள்ள லாட்டரி கடை ஒன்றிலிருந்து கேரள அரசின் 50- 50 லாட்டரி சீட்டை ஒன்றை எடுத்துள்ளார்.அன்றைய தினமே அந்த லாட்டரி சீட்டுகளின் முடிவுகள் வெளியாக இருந்தன. இந்த நிலையில் லாட்டரி சீட்டு முடிவுகள் மூன்றரை மணி அளவில் வெளியாகியது.

இதில் அதிர்ஷ்டம் என்னவென்றால் பாவா எடுத்த லாட்டரி சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.கடனால் தவித்து வீட்டை விற்க செல்லும் ஒரு மணி நேரம் முன்பு பாவாவுக்கு ஒரு கோடி ரூபாய் லாட்டரி சீட்டு வழியாக பரிசாக கிடைத்துள்ளது.இது குறித்து பாவா கூறுகையில் தன்னுடைய கடனை அடைத்து மீத பணத்தில் என்னைப்போல் கஷ்டப்படுபவர்களை உதவுவேன்.

இந்த லாட்டரி சீட்டு கடை உரிமையாளருக்கும் உதவுவதாக வாக்கு கொடுத்துள்ளேன் ஒரு கோடி பரிசு கிடைத்ததால் வேலைக்கு செல்லாமலும் இருக்க மாட்டேன் என் பெயிண்டிங் வேலையை தொடர்வேன் என அவர் கூறியுள்ளார். தற்போது முகமது பாவா தனது ஊரிலும் கேரளாவிலும் மிகவும் பிரபலமாகியுள்ளார்.