புதுச்சேரி அரசை கண்டித்து ஏஐடியுசி போராட்டம்!

ஊழியர்களை இதுவரை அழைத்து பேசாத முதலமைச்சர், துணைநிலை ஆளுநர் மற்றும் துறை அமைச்சரை கண்டிக்கும் வகையில் அவர்களின் முக்கவசத்தை அணிந்து சங்கு ஊதும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி அரசை கண்டித்து ஏஐடியுசி போராட்டம்!

புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய 55 மாதமாக சம்பளத்தை வழங்க வேண்டும் என கோரி கடந்த 3 தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊழியர்களை இதுவரை அழைத்து பேசாத முதலமைச்சர், துணைநிலை ஆளுநர் மற்றும் துறை அமைச்சரை கண்டிக்கும் வகையில் அவர்களின் முக்கவசத்தை அணிந்து சங்கு ஊதும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாப்ஸ்கோவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 55 மாதங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தங்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், தீபாவளி பஜார் நடத்திய மானியம் ரூ.65 லட்சத்தை வழங்க வேண்டும். பாப்ஸ்கோ நிறுவனத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலை வழங்கி மாதம் தவறாமல் சம்பளம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி பாப்ஸ்கோ ஊழியர்கள் சங்கம்(.. டி.யூ.சி.) சார்பில் சட்டப்பேரவை அருகே கடந்த 3 தினங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதுவரை அரசு இவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் அமைதியாக இருப்பதை கண்டித்தும், அவர்களை தட்டி எழுப்பும் வகையில் ஊழியர்கள் 3-வது நாளாக இன்று துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, துறை அமைச்சர் சாய் சரவணன்குமார் ஆகியோரின் முகமூடி அணிந்த 3 பேரையும் நிற்க வைத்து அவர்களுக்கு சங்கு ஊதியும், மணி அடித்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.