தெலுங்கானாவில் மக்களை சந்திக்க தமிழிசைக்கு தைரியம் உள்ளதா? நாராயணசாமி கேள்வி!

உலக அளவில் தலை குனிவை ஏற்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடி முழு பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.

தெலுங்கானாவில் மக்களை சந்திக்க தமிழிசைக்கு தைரியம் உள்ளதா? நாராயணசாமி கேள்வி!

புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சம்தித்தார் அப்போது பேசிய அவர் மதக்கலவரம், தீவிரவாதம் உள்ளதால் அமெரிக்கர்கள் இந்தியாவிற்கு செல்ல வேண்டாம் என நான்கு முறை அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் மதத்தின் பெயரால் இந்தியாவில் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என ஜ.நாவில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை தந்துள்ளது. 

தெலுங்கானாவில் மக்களை சந்திக்க தமிழிசைக்கு தைரியம் உள்ளதா?
 
மதத்தை வைத்து அரசியல் செய்து அதன் மூலம் மக்களை திசை திருப்பி பாஜக அரசியல் லாபம் தேடுவதாக குற்றம் சாட்டினார். மேலும் உலக அளவில் தலை குனிவை ஏற்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடி முழு பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய அவர் ஆளுநர் மாளிகையில்  பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்க துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் துணைநிலை ஆளுநர் தமிழிசை, தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் மக்களை சந்திக்க தைரியம் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார். 

மின்துறை தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு 

மேலும் முதலமைச்சரோடு இணக்கமாக உள்ளது போல நடந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் முதுகில் குத்தி இரட்டை ஆட்சி நடத்துகிறார் என்று கூறினார். மேலும் மின்துறையை  தனியார்மயமாக்கினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் கடந்த ஆட்சியில்  தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிர்த்து போராடியதாகவும் ஆனால் தற்போது மின்துறை தனியார்மயமாக்கல் விவகாரத்தில் அரசு சரணாகதி அடைந்துள்ளது என்றும் நாராயணசாமி தெரிவித்தார். 

ரங்கசாமி ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்படும் 

முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சி விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்றார். இதேபோல் தொழில்துறையில் அனுமதி பெறாமல் புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. என்றும் இது தொடர்பாக தகவல் பெறும் உரிமை சட்டத்தில் தகவல் கேட்டால் தகவக் தர மறுக்கிறார்கள். புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு உரிமம் வழங்கியதில் ரூபாய் 90 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், ஊழல் தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.