சுருக்கு வலை விவகாரம்...மோதலை தடுக்க போலீஸ் குவிப்பு!

வீராம்பட்டினம் மீனவ கிராம பஞ்சாயத்தார் கடந்த வாரம் ஆலோசனை கூட்டம் நடத்தி இன்று முதல் புதுச்சேரி வீராம்பட்டினம் துறைமுகம் மற்றும் தேங்காய் திருட்டு துறைமுகத்திற்கு சுருக்கு வலையுடன் வரும் படகுகளை அனுமதிக்க மாட்டோம் என்றும் மீறி வரும் படகுகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

சுருக்கு வலை விவகாரம்...மோதலை தடுக்க போலீஸ் குவிப்பு!

புதுச்சேரியில் சுருக்குவலை பயன்படுத்தும் விவகாரத்தில் மீனவ கிராமங்களுக்கு இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் வீராம்பட்டினம், நல்லவாடு மற்றும் வம்பாகீரப்பாளையம் மீனவ கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சுறுக்குவலை பயன்படுத்துதல் 

புதுச்சேரியில் அரசு தடையை மீறி ஒரு சில மீன கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடித்து வருவதால் கடந்த ஆண்டு வீராம்பட்டினம், நல்லவாடு மற்றும் வம்பாக்கீரபாளையம் மீனவர்கள் இடையே பெரிய அளவில் மோதல் வெடித்தது. 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் டைப் செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

வீராம்பட்டினம் துறைமுகத்தில் எதிர்ப்பு 

இச்சம்பவத்திற்கு பிறகு சுருக்கு வலையை பயன்படுத்தக் கூடாது என மீனவ கிராமங்களுக்கு இடையே முடிவு எடுக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு சில மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் தொடர்ந்து சுறுக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடித்து வந்துள்ளனர். இந்நிலையில் வீராம்பட்டினம் மீனவ கிராம பஞ்சாயத்தார் கடந்த வாரம் ஆலோசனை கூட்டம் நடத்தி இன்று முதல் புதுச்சேரி வீராம்பட்டினம் துறைமுகம் மற்றும் தேங்காய் திருட்டு துறைமுகத்திற்கு சுருக்கு வலையுடன் வரும் படகுகளை அனுமதிக்க மாட்டோம் என்றும் மீறி வரும் படகுகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

மோதல் தவிர்க்க போலீஸ் குவிப்பு 

வீராம்பட்டினம் கிராமம் மீனவ பஞ்சாயத்தின் இந்த அறிவிப்பால் வீராம்பட்டினம், நல்லவாடு மற்றும் வம்பாகீரபாளையம் மீனவ கிராமங்களுக்கிடையே மீண்டும் மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று மீனவ கிராமங்களிலும் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

வீராம்பட்டினம், நல்லவாடு, வம்பாகீரப்பாளையம் கடற்கரை, வீராம்பட்டினம் துறைமுகம் மற்றும் தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மீனவர் கிராமங்களுக்கு இடையே நிலை வரும் இந்த பதற்றுமான சூழ்நிலையை சரி செய்வதற்காக தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தையும் நடைபெற உள்ளது.