புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள் போராட்டம்!

காலியாக உள்ள பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வலியுறுத்தினர்.

புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள் போராட்டம்!

அமைச்சக ஊழியர்கள் புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேரடியாக நிரப்ப எதிர்ப்பு

புதுச்சேரி அரசுத் துறைகளில் 3000க்கும் மேற்பட்ட அமைச்சக ஊழியர்கள் (முதுநிலை, இளநிலை எழுத்தாளர்கள் மற்றும் உதவியாளர்கள்) பணியாற்றி வருகின்றனர். இவர்கள் புதுச்சேரி அரசு துறைகளில்  காலியாக உள்ள அமைச்சக ஊழியர்களுக்கான பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

மேலும் படிக்க : நகராட்சி தினக்கூலி ஊழியர்கள் போராட்டம்!

அரசு ஊழியர்கள் கோரிக்கை

காலியாக உள்ள பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வலியுறுத்தியும், புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அமைச்சக ஊழியர்கள் 200க்கும் மேற்பட்டோர் தலைமை செயலகம் இரண்டாவது மாடியில் உள்ள அரசு செயலர் அறை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்து தலைமைச் செயலகம் வந்த பெரிய கடை போலீசார் தர்னாவில் ஈடுப்பட்ட ஊழியர்களை போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல வலியுறுத்தினர். ஆனால் ஊழியர்கள்  கலைந்து செல்லாமல் தொடர்ந்து  போராட்டத்தில் ஈடுப்பட்டதால் ஊழியர்களிடம் அரசு செயலர் கேசவன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். ஊழியர்களின் இந்த போராட்டம் காரணமாக தலைமை செயலக பணிகள் பாதிப்படைந்துள்ளது.