ஜெகதீப் தன்கர் விவசாயிகளோடு நெருங்கிய தொடர்புடையவர் - பிரதமர் மோடி

2022ம் ஆண்டு, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டம் சுமூகமாக நிறைவடைந்தது.

ஜெகதீப் தன்கர் விவசாயிகளோடு நெருங்கிய தொடர்புடையவர் - பிரதமர் மோடி

கூட்டத் தொடர் தொடங்கியதும் மாநிலங்களவையில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உரையாற்றிய பிரதமர், நமது குடியரசுத் துணைத் தலைவர் ஒரு விவசாயின் மகன் என்பதாலும் சைனிக்  பள்ளியில் படித்தவர் என்பதாலும் விவசாயிகள் மற்றும் ராணுவ வீரர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர் என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து பேசிய மாநிலங்கவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்கவைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிர்கட்சிகளின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்தார். அடுத்த ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா எல் சிசி கலந்து கொள்ளவுள்ளதாக மாநிலங்கவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்தார். 

மேலும் படிக்க | நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பவுள்ள கேள்விகள்..!

வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியெற்றத்தை முற்றிலும் நீக்கும் முனைப்பில் இந்திய ரயில்வே துறை செயல்பட்டு வருவதாக மக்களைவையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். 

முதல் நாள் கூட்டத் தொடரில் தேசிய நீதித் துறை நியமன ஆணைய மசோதா ஒரு மனதாக மாநிலங்கவையில் நிறைவேறியது. வன விலங்கு பாதுகாப்பு சட்ட திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் புபேந்தர் யாதவ் மாநிலங்கவையில் தாக்கல் செய்தார்.

இதேபோல, மக்களவை கூடியதும் மறைந்த உறுப்பினர்களுக்க அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து மக்களவையில் இன்று பல மாநில கூட்டுறவு சட்ட திருத்த மசோதாவை மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சர் பி எல் வர்மாவும் , கடல்கொள்ளை தடுப்பு மசோதாவை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் தாக்கல் செய்தனர்.

மேலும் படிக்க | குளிர்கால கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் முன் ஒத்திகை...!!!