குளிர்கால கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் முன் ஒத்திகை...!!!

குளிர்கால கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் முன் ஒத்திகை...!!!

கூட்டத்திற்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.  இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து கட்சி கூட்டம்:

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை முன்னிட்டு அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.  இதில் பல்வேறு கட்சிகளின் அவைத் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். இக்கூட்டத்தில், குளிர்கால கூட்டத்தொடரின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்யவும், சட்டமன்றப் பணிகள் மற்றும் அது தொடர்பான முக்கியப் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.  மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மாலை நடைபெறவுள்ள ஆலோசனைக் குழுவின் கூட்டத்திற்கு தலைமை தாங்குவார் என செய்திகள் தெரிவிக்கின்றன.  

குளிர்கால கூட்டத்தொடர்:

குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7ம் தேதி தொடங்கி 29ம் தேதி முடிவடையும்.  இந்த குளிர்கால கூட்டத்தொடரில் மொத்தம் 17 அமர்வுகள் நடைபெறும்.  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்து கட்சி தலைவர்களின் ஒத்துழைப்பையும் அரசு எதிர்பார்ப்பதாக தெரிகிறது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:     ”உலகம் மாறிவிட்டது, சிபிஐயும் மாற வேண்டும்” உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து!!!