ஹெல்மெட் அணியவில்லை என்றால் ரூபாய் 1000 அபராதம்!

ஹெல்மெட் அணியவில்லை என்றால் ரூபாய் 1000 அபராதம்!

சாலை விபத்துக்கள் அதிகரித்து வருவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தி உள்ளார். மேலும் ஹெல்மெட் அணியவில்லை என்றால் நடைமுறையில் உள்ள ரூ. ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிகரிக்கும் சாலை விபத்துகள்

புதுச்சேரியில் 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை 3410 சாலை விபத்துக்கள் நடைபெற்றுள்ள நிலையில் 445 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே பெரும்பாலானோர் ஹெல்மெட் அணியாததன் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சாலை விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டுமென போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் அறிவுறுத்தி உள்ளார். 

ஹெல்மட் கட்டாயம்

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தகுதியான ஹெல்மெட்டை அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்ட வேண்டும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக்கூடாது, அதிவேகமாக ஓட்டக்கூடாது, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது என அறிவுறுத்தி உள்ள அவர் ஹெல்மெட் அணியாமலும், செல்போன் பேசிக்கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டினால் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது படி ரூ.ஆயிரம் அபராதம் விதித்து 3 மாதம் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.